UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 06:19 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ள, வாழ்வாதார உதவி அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மகளிர் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள, வாழ்வாதார உதவி அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் கட்டணமில்லா தொலைபேசி எண், 155330. இந்த எண்ணை அலுவலக வேலை நாட்களில், காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில், இளைஞர்கள் சுயதொழில் செய்ய, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
