தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாறு சதவீதம் எழுத்தறிவே இலக்கு: கல்வி அமைச்சர்

நுாறு சதவீதம் எழுத்தறிவே இலக்கு: கல்வி அமைச்சர்

நுாறு சதவீதம் எழுத்தறிவே இலக்கு: கல்வி அமைச்சர்


UPDATED : ஆக 05, 2023 12:00 AM

ADDED : ஆக 05, 2023 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2023 12:00 AM ADDED : ஆக 05, 2023 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் கல்வித்துறையின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குனர் முத்துபழனிச்சாமி வரவேற்றார். 114 கற்போர் மையங்களின் தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், தன்னார்வலர் ஆகியோருக்கு அமைச்சர்கள் மூர்த்தி, மகேஷ் ஆகியோர் விருது, பாராட்டுச் சான்றுகள் வழங்கினர்.அமைச்சர் மகேஷ் பேசியதாவது: 
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.ஒரு மாவட்டத்திற்கு 3 கற்போர் மையம் வீதம் 38 மாவட்டங்களில் 114 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2022 - 2023ல் 5.28 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்று பயனடைந்தனர். இந்தாண்டு 4.80 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1990களில் 62 சதவீதம் கல்வியறிவு பெற்ற தமிழகம், தற்போது 80 சதவீதமாக உள்ளது. இதை 100 சதவீதமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கேற்ப கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும், என்றார்.அமைச்சர் மூர்த்தி பேசுகையில், கல்வித்துறையில் தமிழகம் முன்மாதிரியாக செயல்படுகிறது. கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கொண்டு முதல்வர் செயல்படுகிறார். கல்விக்காகவே மதுரையில் பிரமாண்ட கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தை முதல்வர் அமைத்துள்ளார். முதல்வரின் செயல்பாடு நிறைவேறும் வகையில் திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, கல்வி இயக்குனர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜமுருகன், ஆர்த்தி, இணை இயக்குனர்கள் அமுதவல்லி, கோபிதாஸ், துணை இயக்குனர்கள் ஆஞ்சலோ இருதயசாமி, சுவாமிநாதன், எம்.எல்.ஏ., தளபதி, மேயர் இந்திராணி பொன்வசந்த், முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். மதுரை சி.இ.ஓ., கார்த்திகா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us