நுாலகத்தை மூடியதாக புகார் ஜே.என்.யூ., பல்கலை மறுப்பு
நுாலகத்தை மூடியதாக புகார் ஜே.என்.யூ., பல்கலை மறுப்பு
UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 09:57 AM
புதுடில்லி:
ஜவஹர்லால் நேரு பல்கலையில், நூலகம் மூடப்பட்டதாக, மாணவர் சங்கம் கூறியுள்ள குற்றச்சாட்டை பல்கலை நிர்வாகம் மறுத்துள்ளது.கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாக ஏ.ஐ.எஸ்.ஏ., எனப்படும் அனைத்திந்திய மாணவர் சங்கம், புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் நூலக வளாகத்தில், வரலாற்று படிப்பு நூலகம் மூடப்பட்டுள்ளது. அந்த இடத்தில், தமிழாய்வுக்கான சிறப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது&'என குற்றம் சாட்டியிருந்தது.இதுகுறித்து, ஜவஹர்லால் நேரு பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்கலை குறித்து தவறான தகவல்கள் மாணவர் அமைப்புகளால் பரப்பி விடப்படுகின்றன. வரலாற்று படிப்பு நூலகம் மூடப்படவில்லை. அருகிலுள்ள கட்டடத்துக்கு மாற்றப்படுகிறது. இடமாற்றம் அடிக்கடி நடக்கக் கூடியதுதான்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால், மாணவர் அமைப்புகளோ, ஜவஹர்லால் நேரு பல்கலையில் தமிழாய்வு இருக்கை அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தமிழ் ஆய்வுக்கான சிறப்பு மையத்துக்காகத்தான் வரலாற்று படிப்பு நூலகம், அருகிலுள்ள கட்டடத்துக்கு மாற்றப்படுகிறது என கூறியுள்ளது.
