பள்ளி மாணவர்கள் சேர்க்கை ஒப்புதல் வழங்காததால் தவிப்பு
பள்ளி மாணவர்கள் சேர்க்கை ஒப்புதல் வழங்காததால் தவிப்பு
UPDATED : ஆக 07, 2023 12:00 AM
ADDED : ஆக 07, 2023 10:35 AM
அனைத்து வகை பள்ளிகளும் மாணவர்கள் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறையின், எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.ஆனால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படாததால் அதை உறுதி செய்ய முடியாமல் நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. ஒரு மாணவரை பள்ளியில் புதிதாக சேர்க்கும் போது அவர் குறித்த விபரங்களை பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் தளத்தில் நிர்வாகத்தால் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட பெற்றோரின் மொபைல் போனுக்கு, ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் எமிஸ் தளத்தில் ஒப்புதல் வழங்கப்படும்.பெற்றோர் மொபைல் போன் எண் மாறுதல், பல்வேறு பிரச்னைகளால் செயல்படவில்லை என்றால் ஒன் டைம் பாஸ்வேர்டுக்கு பதில் மூன்று நாட்களில் தானாக ஒப்புதல் வழங்கப்படும். அதன் மூலம் பள்ளி மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்யப்படும்.தற்போது, எமிஸ் தளத்தில், 10 நாட்களாகியும் ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள்சேர்க்கையை உறுதிப்படுத்த முடியாமல் பள்ளி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. புதிய மாணவர்கள் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்க முன் வர வேண்டும் என நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.
