தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யோகா மருத்துவ படிப்பு தேர்வு குழு அறிவிப்பு

யோகா மருத்துவ படிப்பு தேர்வு குழு அறிவிப்பு

யோகா மருத்துவ படிப்பு தேர்வு குழு அறிவிப்பு


UPDATED : ஆக 08, 2023 12:00 AM

ADDED : ஆக 08, 2023 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2023 12:00 AM ADDED : ஆக 08, 2023 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு, 1,710 இடங்கள் உள்ளன. இதில், 557 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு, tnhealth.tn.gov.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் மாணவர் சேர்க்கை துவங்குகிறது. இதுகுறித்து, இந்திய மருத்துவ கல்வி தேர்வு குழு செயலர் மலர்விழி கூறியதாவது: 
யோகா மருத்துவ மாணவர் சேர்க்கையில், இந்தாண்டு முதல் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையையும், தேர்வு குழு தான் நடத்த உள்ளது. எனவே, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆண்டு கல்வி கட்டணம் 5,000 ரூபாய்; சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1.25 லட்சம் ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us