மாணவர்களிடையே நல்லிணக்கம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு
மாணவர்களிடையே நல்லிணக்கம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு
UPDATED : ஆக 12, 2023 12:00 AM
ADDED : ஆக 12, 2023 04:14 PM
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதி பிரச்னையால் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்களே கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு, கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை பெற்று அதன் அடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
