UPDATED : ஆக 12, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 09:37 AM
கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ் இளநிலை, முதுநிலை மாணவர்கள் சேர்க்கை செயல்பாடுகளுக்கான, இறுதிநாள் நிர்ணயித்து கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த, மே மாதம் இறுதி முதல், இளநிலை மாணவர்கள் சேர்க்கை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. வகுப்புகள் துவங்கிய நிலையில், காலியிடங்களில் தொடர்ந்து மாணவர்கள், பல்கலையின் அனுமதியுடன் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேர்க்கை செயல்பாடுகள் விரைவில் நிறைவு பெற உள்ளதாக, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் படி, பாரதியார் பல்கலை அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில், இளநிலை பிரிவில், ஆக.,14ம் தேதி வரையும், முதுநிலை பிரிவில் 31ம் தேதி வரையும் மட்டுமே சேர்க்கை செயல்பாடுகள் மேற்கொள்ள இயலும். அதன் பிறகு, காலியிடங்கள் இருந்தாலும் சேர்க்கை அனுமதிக்கப்படாது.
