தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவு

கல்வித்தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவு

கல்வித்தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவு


UPDATED : ஆக 13, 2023 12:00 AM

ADDED : ஆக 13, 2023 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2023 12:00 AM ADDED : ஆக 13, 2023 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை சார்பில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், நிர்வாகத்தை எளிதாக்குதல் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம், மறைமலை நகர் அடுத்த, எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், நேற்று நடந்தது.இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் இந்துபாலா, முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், வட்டார கல்வி அலுவலர்கள், அரசு, தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அதன்பின், பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று, கல்வியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்த குறுவட்டை வெளியிட்டார். மாவட்டத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பேசியதாவது:
மாவட்டத்தில், அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த, தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுடன் தான், மாணவர்கள் அதிக நேரம் இருப்பதால், நண்பர்களாக பழகி, கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். போதை பழக்கங்களில், மாணவர்கள் அடிமையாகாமால் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தரும். மேலும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும், அடிப்படை வசதிகள் தேவை குறித்து தெரிவித்தால், உடனடியாக செய்து தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us