இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கர்நாடகா துணை முதல்வர் கவுரவம்
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கர்நாடகா துணை முதல்வர் கவுரவம்
UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 03:53 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு:
இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் பாராட்டினார் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் .நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நேற்று (ஆக.,23) மாலை 6:04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் விதமாக இஸ்ரோ சென்ற துணை முதல்வர் சிவக்குமார், விஞ்ஞானிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தினார்.
