தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயல்படாத துறை தலைவர்கள் சென்னை பல்கலை கிடுக்கிப்பிடி

செயல்படாத துறை தலைவர்கள் சென்னை பல்கலை கிடுக்கிப்பிடி

செயல்படாத துறை தலைவர்கள் சென்னை பல்கலை கிடுக்கிப்பிடி


UPDATED : ஆக 24, 2023 12:00 AM

ADDED : ஆக 24, 2023 03:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2023 12:00 AM ADDED : ஆக 24, 2023 03:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலை துறை தலைவர் பதவிக்கான விதிகளில், புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.சென்னை பல்கலையில் துறை தலைவர் என்ற ஹெச்.ஓ.டி., பதவியில், ஒருவர் அமர்த்தப்பட்டால், அவரது ஓய்வு வயது வரை அந்த பதவியில் இருந்து மாற்ற முடியாது. துறை தலைவர் சரியாக செயல்படாவிட்டாலும், அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுத்து, அதிக உறுப்பினர் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, அவரை மாற்ற முடியும் என்ற விதி உள்ளது.இந்த விதியால், பல நேரங்களில் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் சிக்கும் பேராசிரியர்கள், தங்களின் துறை தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, துறை தலைவர் பதவிக்கான விதிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, துறை தலைவராக ஒரு பேராசிரியர் நியமிக்கப்பட்டால், அவரது செயல்பாடுகள் சரியாக இல்லாவிட்டால், அவரை எந்த நேரத்திலும் மாற்றி கொள்ளவும், பதவியில் இருந்து நீக்கவும், துணை வேந்தருக்கு சிண்டிகேட்டில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்சம், 2 ஆண்டுகள் பணியில் நீடிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், சென்னை பல்கலையில் அமலுக்கு வந்துள்ளன. எனவே, வரும் ஆண்டுகளில் துறை தலைவர்களின் செயல்பாடுகளை, துணைவேந்தர்கள் கண்காணிக்க முடியும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us