UPDATED : ஆக 28, 2023 12:00 AM
ADDED : ஆக 28, 2023 09:54 AM
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த பட்டூர் அரசு துவக்கப் பள்ளி யில், காலை உணவு திட்டத்தை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் 1,545 அரசு துவக்கப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் 1.14 லட்சம் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்., 15ல் துவங்கப்பட்டது. அடுத்த கட்டமாக இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி நேற்று முன்தினம் திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் பங்கேற்று, காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ, மாணவியருடன் உணவருந்தினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன், சப் கலெக்டர் (பொ) லுார்துசாமி மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
