UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 06:24 PM
விருதுநகர்:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு செப். 10ல் நடக்க உள்ளது. மாவட்டத்தில் 4 மையங்களில் 1235 பேர் தேர்வு எழுதுகின்றனர்.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையோடு தேர்வுக்கு வர வேண்டும். எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது. விவரங்களை trb.tn.nic.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம். விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி 340 பேர், ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 340 பேர், கே.வி.எஸ்., ஆங்கிலப்பள்ளியில் 280 பேர், பி.எஸ்.சிதம்பரநாடார் ஆங்கிலப்பள்ளியில் 275 என 1235 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
