UPDATED : செப் 07, 2023 12:00 AM
ADDED : செப் 07, 2023 05:29 PM
கடலுார்:
மாணவர்களின் பொக்கிஷமாக விளங்குகிறது தினமலர்-பட்டம் இதழ் என, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நடராஜன் பேசினார்.கடலுார், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மெகா வினாடி- வினா போட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மெகா வினாடி-வினா போட்டிக்கான தகுதிச் சுற்று முதல் நிலை தேர்வு நடந்தது. தேர்வில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் 3,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 16 பேர் மெகா வினாடி-வினா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். ஆசிரியர் தினத்தன்று இங்கு வினாடி- வினா போட்டியை நடத்த உறுதுணையாக இருந்த தினமலர் நாளிதழுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.பாட புத்தகங்களில் இருப்பதை மட்டும் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் பாட புத்தகங்களில் இருப்பதை மட்டுமின்றி பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் உதவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
