தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரிய பயிற்றுனர்களுக்கு போதிய சம்பளம் இல்லை

ஆசிரிய பயிற்றுனர்களுக்கு போதிய சம்பளம் இல்லை

ஆசிரிய பயிற்றுனர்களுக்கு போதிய சம்பளம் இல்லை


UPDATED : செப் 14, 2023 12:00 AM

ADDED : செப் 14, 2023 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2023 12:00 AM ADDED : செப் 14, 2023 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: 
மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான கல்வி, உணவு, உடை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க தமிழக அரசு இரண்டாயிரத்தில் சிறப்பு கவனம் செலுத்தியது.இதைத் தொடர்ந்து 2002-3ல் ஒன்றியம் வாரியாக வட்டார வள மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இரண்டு பேர் பணி அமர்த்தபட்டனர். திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் 2011 ல் ஒன்றிய வாரியாக ஐந்து பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிறப்பு ஆசிரிய பயிற்றுனர்களாக பி.எட்., முடித்தவர்கள், சிறப்பு ஆசிரிய பயிற்றுனர்களாக பணியில் சேர்க்கப்பட்டனர்.இவர்களுக்கான வேலை, கிராமங்களில் சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான பள்ளியில் சேர்த்து பயிற்சி தருவதே ஆகும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் பெற்று தருவது, அவர்களுக்கு மாத பராமரிப்பு தொகை ரூ.2000 பெற்று தருவது என பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.இப்படிப்பட்ட முக்கிய பணிகளில் பணியாற்றும் பி.எட்., பட்டதாரி பயிற்றுள்ளங்களுக்கு மாத சம்பளமாக ரூ.3 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது தான் ரூ.20 ஆயிரம் வாங்கிக் கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட அளவில் 75 பேர் பணியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதம் எதுவும் வழங்கப்படவில்லை. சம்பளம் பிடித்தமும் செய்யப்படவில்லை.ஓய்வு பெற்றாலும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்ற குமுறல் சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்களிடையே எழுந்துள்ளது. பி.எட்., முடித்து 20 ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில் ரூ. 20 ஆயிரத்தை தாண்ட முடியவில்லையே என்ற குமுறல் இவர்களிடையே எழுந்துள்ளது. தமிழக அரசு இந்த சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான உத்தரவு வழங்க வேண்டும். இதோடு ஊதியத்தையும் கூடுதலாக வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us