UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 05:05 PM
சென்னை:
சென்னை பல்கலையில், பல ஆண்டுகளாக பிஎச்.டி., முடிக்காதவர்களுக்கு, 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் விதிப்படி, பல்கலைகளில், பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வோர், பதிவு செய்த நாளில் இருந்து, 7 ஆண்டுகளுக்குள் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்து, பிஎச்.டி.,யை நிறைவு செய்ய வேண்டும். இந்நிலையில், சென்னை பல்கலையின், 7 ஆண்டுகளை கடந்தவர்களுக்கு, பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பை முடிப்பதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.இதையடுத்து, பல பட்டதாரிகள் படிப்பை தொடர, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 7 ஆண்டுகள் முதல், 20 ஆண்டுகள் வரை பிஎச்.டி., முடிக்காதவர்களுக்கு, அபராதம் விதித்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, முழுநேர பிஎச்.டி., மாணவர்களுக்கு, 50,000 ரூபாயும்; பகுதிநேர மாணவர்களுக்கு, 1 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தினால், அக்., 31க்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
