தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் செம்மொழி மாநாடு: பிரதிபா துவக்கி வைக்கிறார்

தமிழ் செம்மொழி மாநாடு: பிரதிபா துவக்கி வைக்கிறார்

தமிழ் செம்மொழி மாநாடு: பிரதிபா துவக்கி வைக்கிறார்


UPDATED : ஜன 24, 2010 12:00 AM

ADDED : ஜன 24, 2010 12:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2010 12:00 AM ADDED : ஜன 24, 2010 12:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக நடைபெற்று வரும் பணிகள் குறித்து, செம்மொழி மாநாட்டிற்கென அமைக்கப்பட்ட குழுக்களின் தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, வரும் ஜூன் 23ல் துவங்கி 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். மாநாட்டின் தொடக்க மற்றும் நிறைவு விழாவிற்கு அழைக்கப்பட உள்ள சிறப்பு விருந்தினர்கள், மாநாட்டின் பொது அரங்கு இடவசதி, மாநாட்டில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாநாட்டின் துவக்க விழாவில் ஊர்வலம் நடத்துவது மற்றும் ஊர்வலம் செல்லும் பாதைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் பொது அரங்கில் அழைக்கப்படும் அறிஞர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்புவது குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டது. மாநாட்டை ஒட்டி தபால்தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இதுவரை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 41 நாடுகள் சம்மதித்துள்ளன. இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளிலிருந்து மட்டும் 373 பேர், செம்மொழி மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்தியா உட்பட மொத்தம் இரண்டாயிரத்து 803 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கென ஆயிரத்து 168 கட்டுரைகள் வந்துள்ளன.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வு அரங்க குழுமைகளாக, சங்க கால வாழ்வியல், வழிபாட்டில் தமிழ், ஆன்மிக தமிழ், தலித் இலக்கியம், பெண்ணியம், ஆட்சித் தமிழ் மற்றும் கலந்துரையரங்கத்தில் தமிழ்வழிக்கல்வி பற்றியும், அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான உரைகள், விவாதங்கள் நடத்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us