UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 07:59 AM
இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள அரசாணை:
தமிழக தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, மேல்நிலை கல்வி பணிகளில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு, வயது உச்ச வரம்பு பொது பிரிவுக்கு, 40 வயது; இதர பிரிவினருக்கு, 45 வயது என, நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2020ல் பிறப்பிக்கப்பட்டது.இதன்பின், பொது பிரிவினருக்கு 45; மற்றவர்களுக்கு, 50 என, சிறப்பு நிகழ்வாக, ஒரு முறை மட்டும் வயது வரம்பு உயர்த்தப்பட்டு, 2021ல் உத்தரவிடப்பட்டது. பின், பொது பிரிவினருக்கு, 42; இதர பிரிவினருக்கு 47 என நிர்ணயிக்கப்பட்டு, 2023ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு, உச்ச வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக, பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.எனவே, ஆசிரியர்களின் பணி நியமன வயது வரம்பை, 2020க்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு வருமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் பரிந்துரைத்துள்ளார். அதை அரசு ஏற்று, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு வயது உச்ச வரம்பு, பொது பிரிவினருக்கு, 53; பிற பிரிவினருக்கு, 58 என்று அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
