தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரியில் இடஒதுக்கீடு அளிக்க ஆங்கிலோ-இந்தியர்கள் கோரிக்கை

கல்லூரியில் இடஒதுக்கீடு அளிக்க ஆங்கிலோ-இந்தியர்கள் கோரிக்கை

கல்லூரியில் இடஒதுக்கீடு அளிக்க ஆங்கிலோ-இந்தியர்கள் கோரிக்கை


UPDATED : ஜன 25, 2010 12:00 AM

ADDED : ஜன 25, 2010 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2010 12:00 AM ADDED : ஜன 25, 2010 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் தங்களுக்கும் அளிக்க வேண்டும்,என ஆங்கிலோ இந்தியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


மத்திய சிறுபான்மையினர் நல விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, ஆங்கிலோ இந்தியர்கள் சார்பில் சார்லஸ் டயஸ் எம்.பி., சமீபத்தில் டில்லியில் சந்தித்து பேசினார்.


இது குறித்து, சார்லஸ் டயஸ் கூறியதாவது:
நாடு முழுவதும் 4.5 லட்சம் ஆங்கிலோ இந்தியர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வாழாமல் பரவிய நிலையில் ஆங்கிலோ இந்திய  சமூகத்தினர் வாழ்வதால் எங்களுக்கென்று தனி சங்கம் இல்லை. எனவே, கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவாக ஆங்கிலோ இந்தியர்கள் இருந்தாலும் சிறுபான்மையினருக்குரிய சலுகைகள் ஏதும் எங்களுக்கு கிடைப்பதில்லை,


மத்திய அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரியாக எங்கள் சமூகத்தினரை நியமித்தால், எங்களுக்குரிய உரிமைகளை கேட்டு பெற முடியும். கேரளாவில் மட்டும் ஒன்றரை லட்சம் ஆங்கிலோ இந்தியர்கள் உள்ளனர். கல்வி உதவித் தொகை, தொழில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு போன்றவற்றை எங்களுக்கு அளிக்க வேண்டும். சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கூட எங்களை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இவ்வாறு சார்லஸ் டயஸ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us