UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 04:33 PM
அ நிறம் | அளவு
அவிநாசி:
திருப்பூர் சாய் கிருஷ்ணா அறக்கட்டளை மற்றும் சாய் கிருஷ்ணா நுண்கலை கூடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பகவான் சீரடி சாய் பாபாவின் ஸத் சரித்திரம் நிருத்திய நாட்டிய நாடகம் நடைபெற்றது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள கருணாம்பிகை கலையரங்கத்தில், விஜயதசமியை முன்னிட்டு இந்த நாட்டிய நாடகம் நடைபெற்றது. சாய் கிருஷ்ணா நுண்கலை கூட நிறுவனர் டாக்டர் சந்தியா சங்கர் தலைமையில், நாட்டிய நாடக வடிவில் வடிவமைக்கப்பட்ட பகவான் ஸ்ரீ சீரடி சாயி பாபாவின் சரித்திரத்தை மாணவியர் செய்தனர்.
