தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குல்லு தசராவில் கலக்கிய தமிழக கிராமிய கலைஞர்கள்

குல்லு தசராவில் கலக்கிய தமிழக கிராமிய கலைஞர்கள்

குல்லு தசராவில் கலக்கிய தமிழக கிராமிய கலைஞர்கள்


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த குல்லு தசரா பண்டிகையில், தமிழக கிராமிய கலைக்குழுவினர் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள குலு பள்ளத்தாக்கில், தால்பூர் மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டில், சர்வதேச மெகா தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பல லட்சம் பேர் பங்கேற்பர்.இந்த விழாவின் நேற்றைய நிகழ்ச்சியில், தமிழக கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதை, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் ரசித்தனர். நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 18 கலைஞர்கள், கலை பண்பாட்டு துறையின் சார்பில் அனுப்பப்பட்டனர்.அவர்கள் காவடியாட்டம், கரகம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருந்த தாள வாத்தியங்களும், நாதஸ்வர இசையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.மேலும், நிகழ்ச்சியின் நடுவில் கலைஞர்கள், வாயிலிருந்து தீ ஜுவாலையை உமிழ்வது, டால்பின் போல் குதித்து, தரையில் கிடக்கும் பொருட்களை கவர்ந்து ஆடுவது உள்ளிட்ட நிகழ்வுகளை விசில் அடித்தும், கை தட்டியும் ரசித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us