தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை உணவு திட்டத்தில் மாற்றம் தேவை! பெற்றோர் எதிர்பார்ப்பு

காலை உணவு திட்டத்தில் மாற்றம் தேவை! பெற்றோர் எதிர்பார்ப்பு

காலை உணவு திட்டத்தில் மாற்றம் தேவை! பெற்றோர் எதிர்பார்ப்பு


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
அரசுப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும், காலை உணவின் வகைகளை மாற்ற வேண்டுமென, பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.அரசுப்பள்ளிகளில் துவக்கநிலை வகுப்பு குழந்தைகளுக்கு, மதிய சத்துணவு மட்டுமின்றி, காலை உணவும் வழங்கும் திட்டத்தை, நடப்பு கல்வியாண்டு முதல் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்துக்கென மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பெரும்பான்மையான பள்ளி வளாகங்களில், கூடுதலாக காலை உணவு தயார்செய்வதற்கென கூடுதல் அறையும் அமைக்கப்பட்டு, தற்போது சமையல் செய்யப்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதியில், நகராட்சியில் குறிப்பிட்ட பள்ளியில் உணவு தயார்செய்து, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவு அனுப்பப்படுகிறது. ஊராட்சிகளில் சிறிய பள்ளிகளுக்கு, அருகிலுள்ள பெரிய பள்ளிகளிலும், மற்றவைக்கு தனித்தனியாக அந்தந்த வளாகத்திலும் உணவு தயார்செய்யப்படுகிறது.காலையில், 8:30 மணிக்கு பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாற வேண்டும். இத்திட்டம் குழந்தைகளின் பசியை போக்குவதற்காக மட்டுமின்றி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களிலிருந்து வரும் பல குழந்தைகளையும், பள்ளிக்கு வரவழைக்கும் திட்டமாகவும் உள்ளது. தற்போது இதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் ஒரே மாதிரியான உணவினால் மாணவர்கள் பலரும், காலை உணவு எடுத்துக்கொள்ள ஆர்வம் இழந்து வருகின்றனர்.பெற்றோர் கூறியதாவது:
அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு, காலையிலும் உணவு வழங்கும் திட்டம் வரவேற்கதக்கது. ஆனால் இத்திட்டத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. மாணவர்கள் சிலர் தொலைதுாரத்திலிருந்து பள்ளிக்கு வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் தாமதமாக பள்ளிக்கு வரவேண்டி நிலை ஏற்படுகிறது. அப்போதும் அவர்களுக்கான உணவு இருக்க வேண்டும்.மேலும், காலை உணவில் சேமியா, உப்புமா என இவைதான் திரும்ப திரும்ப வழங்கப்படுகின்றன. ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவதில், மாணவர்களும் ஆர்வம் இழக்கின்றனர். அதனால், பலரும் வீட்டில் சாப்பிட்டு செல்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்ப வேறுவிதமான உணவுகளையும், இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். காலை உணவு, குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் இருப்பதற்கும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பெற்றோர் கருத்துகளை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us