UPDATED : நவ 01, 2023 12:00 AM
ADDED : நவ 01, 2023 04:34 PM
அ நிறம் | அளவு
திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டம், அம்மணாங்கோவில் கள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 17.32 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு வகுப்பறைகள் கட்டப்பட்டு, கடந்த ஜூனில் திறக்கப்பட்டன.விடுமுறைக்கு பின், கடந்த 25ல் பள்ளி திறக்கப்பட்ட போது, வகுப்பறையில், சிமென்ட் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்து கிடந்தது. இதை பார்த்த பெற்றோர், மாணவ, மாணவியர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி, மரத்தடியில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள், பள்ளியில் நேற்று ஆய்வு செய்த பின், சீரமைக்கும் பணி நடக்கிறது.
