தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய குடிமைப்பணி தேர்வு மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி

இந்திய குடிமைப்பணி தேர்வு மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி

இந்திய குடிமைப்பணி தேர்வு மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி


UPDATED : நவ 07, 2023 12:00 AM

ADDED : நவ 07, 2023 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2023 12:00 AM ADDED : நவ 07, 2023 10:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
மீனவ சமுதாய இளைஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.இத்திட்டத்தின் கீழ், 2023 - 24ம் ஆண்டில் பயிற்சி பெற விரும்புவோர், விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில், கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சென்னை, நீலாங்கரையில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், அலுவலக நாட்களில் விண்ணப்ப படிவங்களை விலையின்றி பெற்றுக்கொள்ளலாம். வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மொபைல் எண்: 93848 24247 - 98433 05513 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us