பிரெஞ்சு கல்வி நிறுவனங்களில் பிரான்ஸ் துாதர் ஆய்வு
பிரெஞ்சு கல்வி நிறுவனங்களில் பிரான்ஸ் துாதர் ஆய்வு
UPDATED : நவ 11, 2023 12:00 AM
ADDED : நவ 11, 2023 10:38 AM
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள இந்தியாவிற்கான பிரான்ஸ் துாதர் பிரெஞ்சு கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.இந்தியாவிற்கான பிரான்ஸ் துாதர் தியரி மாத்துா, அரசுமுறை பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவர், லிசே பிரான்சே பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி, அலையன்ஸ் பிரான்சைஸ் நிறுவனத்தை ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி, கலாசாரம், அறிவியல் துறைகளில் பிரெஞ்சு கல்வி நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை கேட்டறிந்தார்.தொடர்ந்து பிரெஞ்சு ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு இன்ஸ்டிடியூட், துார கிழக்கு ஆய்வுக்கான பிரெஞ்சு மையமான எக்கோல் பிரான்சே சென்று அங்கு நடக்கும் ஆய்வு பணிகளை கேட்டறிந்தார்.பின்னர் பிரெஞ்சு துணை துாதகரகத்தில் நடந்த விழாவில் பங்கேற்று, டாக்டர் சதீஷ் நல்லாமுக்கு நேஷனல் ஆர்டர் ஆப் மெரிட் என்ற துாதர் முத்திரையை வழங்கினார். கலாசாரம், பாரம்பரியம், கல்வி தளங்களில் பிரான்ஸ்- இந்தியா இடையில் ஒத்துழைப்பு அளித்தற்காக இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.இன்று போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி, ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சுக்காரர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். ஆய்வின்போது பிரெஞ்சு துணை துாதர் லிஸ் டால்போட் பரே உடனிருந்தார்.
