தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை தேர்வில் குளறுபடி பழைய வினாத்தாளால் சர்ச்சை

பல்கலை தேர்வில் குளறுபடி பழைய வினாத்தாளால் சர்ச்சை

பல்கலை தேர்வில் குளறுபடி பழைய வினாத்தாளால் சர்ச்சை


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 04:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்:
வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும், 70க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில், 2.50 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.பல்கலையில் தற்போது,பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. முதுநிலை கணிதவியல், 3வது பருவ தேர்வில், 2021ம் ஆண்டின் வினாத்தாள் அப்படியே, எவ்வித மாற்றமும் இல்லாமல் வினியோகிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, டோலோஜி, டிபரன்ஷியல் ஜியாமெட்ரி, காம்ப்ளக்ஸ் அனலைசிஸ் ஆகிய தேர்வுகளில், பழைய மூன்று தேர்வுகளின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களே மீண்டும் வினியோகிக்கப்பட்டன. எனினும்,அதில், ஆண்டு மட்டும், 2023 என மாற்றப்பட்டு உள்ளது.கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
தேர்வுத்துறை சரியான முறையில் செயல்படுவதில்லை. வினாத்தாள் வடிவமைப்பு குழுவிடம் பெறப்படும் வினாத்தாளை சரி பார்ப்பு குழு ஆய்வு செய்ததா என்றும் தெரியவில்லை. பழைய வினாத்தாள்களையே மீண்டும் வழங்க, எதற்காக கேள்வித்தாள் வடிவமைப்பு குழு அமைத்து அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும்?இவ்வாறு கூறினர்.பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் கூறுகையில், பழைய வினாத்தாள் வெளியானது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அதன்படி, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us