தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவியின் கண் பார்வை பாதிப்பு: ஆசிரியை கைது

மாணவியின் கண் பார்வை பாதிப்பு: ஆசிரியை கைது

மாணவியின் கண் பார்வை பாதிப்பு: ஆசிரியை கைது


UPDATED : ஜன 31, 2010 12:00 AM

ADDED : ஜன 31, 2010 08:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2010 12:00 AM ADDED : ஜன 31, 2010 08:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டேரி, மங்களபுரி, நான்காவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி எழிலரசி. இவர்களது மகள் மதுமிதா வீட்டிற்கு அருகில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த 14ம் தேதி மதுமிதா பள்ளிக்கு சென்றார். மூன்றாம் வகுப்பு ஆசிரியை வெளியில் சென்றிருந்ததால், முதல் வகுப்பு ஆசிரியை ரேணுகா வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தார். குறும்பு செய்ததாக கூறி மதுமிதாவை ரேணுகா அடித்ததில், அவரது கையில் இருந்த கண்ணாடி வளையல் உடைந்து, மதுமிதாவின் வலது கண்ணுக்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மதுமிதாவின் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கண்ணை குணப்படுத்த ஆகும் செலவை ஏற்பதாக ஆசிரியை தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், கூறியபடி எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மாணவியின் தாய் எழிலரசி போலீசில் புகார் செய்தார். ஓட்டேரி போலீஸ்  இன்ஸ்பெக்டர் அமல் ஸ்டான்லி ஆனந்த், வழக்கு பதிந்து ஆசிரியை ரேணுகாவை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us