UPDATED : பிப் 01, 2010 12:00 AM
ADDED : பிப் 01, 2010 11:36 AM
தேவாரம்: ‘நியூட்ரினோ’ ஆய்வு மையம் அமைக்க தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் அம்பரப்பர் கோவில் கரடு பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தரையிலிருந்து ஓரிரண்டு கி.மீ., உயரமான மலை, மலைக்கு அடியில் சுரங்கத்தில் நியூட்ரினோ உணர்வு கருவி அமைக்கப்படுகிறது. வயது முதிர்ந்த கற்பாறைகள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், இந்த ஆய்வுக் கூடம் அமைக்க ஏற்றதாக உள்ளது. எனவே இப்பகுதியை, நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.
சின்னமனுõரில், சென்னை ஐ.ஐ.டி., இயற்பியல் விஞ்ஞானிகள் வெங்கடேஸ்வரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். நியூட்ரினோ ஆய்வுக்கும் அணு பயன்பாட்டிற்கும் தொடர்பு கிடையாது என்று தெளிவுபடுத்தினர். இதனால், அணுக்கதிர் வீச்சு பயம் தேவையில்லை என்று உறுதியளித்தனர்.
