தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மாணவர்களின் கையில் தொழில்நுட்ப புரட்சி’

‘மாணவர்களின் கையில் தொழில்நுட்ப புரட்சி’

‘மாணவர்களின் கையில் தொழில்நுட்ப புரட்சி’


UPDATED : பிப் 01, 2010 12:00 AM

ADDED : பிப் 01, 2010 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2010 12:00 AM ADDED : பிப் 01, 2010 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “உலகளவில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் காணப்படும் சவால்களை எதிர் கொண்டு, இந்தியா முன்னிலை வகிக்க, தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் திறன் மாணவர்கள் கையில் உள்ளது,” என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசினார்.


கோவை சி.ஐ.டி., இன்ஜி., கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி, ‘இன்டர்பேஸ்’ மற்றும் ‘டெக்னோவிஷன்’ துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:


இந்திய இன்ஜினியர்கள் படிப்பில் சிறந்து விளங்கினாலும், ஆங்கிலம் பேச மற்றும் சரளமாக எழுதத் தெரியாத ஒரே காரணத்தால், பின்தங்கி வருகின்றனர். இதை மாற்ற, இந்திய இன்ஜினியரிங் கல்லூரிகளில் 250 கோடி ரூபாய் செலவில், மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


தேசிய தகவல் கமிஷன் கீழ் 5,000 இன்ஜி., கல்லூரிகள், 5,000 பல்கலைகள் மற்றும் 20 ஆயிரம் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரே கட்டுப்பாட்டில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் எந்த பகுதியிலும் நடக்கும் தொழில்நுட்ப விழாக்கள் உட்பட ஐ.டி., துறையில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அனைத்து மாணவ, மாணவியரும் உடனடியாக அறியலாம்.


சர்வதேச அளவில் ஐ.டி., துறையில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில், இந்திய தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறையும் வளர்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை குறித்த விழிப்புணர்வு, கிராமங்களுக்கு இல்லாமல் உள்ளது. இதற்காக, அனைத்து கிராம ஊராட்சி, ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல துறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில், நாட்டிலுள்ள அனைத்து கிராம அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாகும்.


தொழில்நுட்பப் புரட்சி என்பது மாணவர்கள் கையில் தான் உள்ளது. பணம் சம்பாதிப்பது, தனிநபர் மேம்பாட்டில் மட்டும் மாணவர்கள் குறிக்கோளாக இருக்கக்கூடாது. நாட்டின் முன்னேற்றம், சமுதாய மேம்பாடு, பரஸ்பர மனிதாபிமான உணர்வுகள் கொண்டு உழைக்க பழக வேண்டும்.


நாட்டில் இன்றைய சூழலில் தகவல் தொடர்புத்துறையில் காணப்படும் முன்னேற்றங்கள் காரணமாக, சக மனிதனை நேசிக்கும் பண்பு, மனித உணர்வுகளை காத்து நடப்பது உட்பட பல நல்ல செயல்கள் மெல்ல குறைந்து வருகின்றன. இதை காக்கும் பொறுப்பு, இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இதை உணர்ந்து அனைவரும் செயல்படுவது அவசியம். இவ்வாறு ராஜா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us