தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுமுறை நாளில் தட்டச்சு தேர்வு: அரசுக்கு கோரிக்கை

விடுமுறை நாளில் தட்டச்சு தேர்வு: அரசுக்கு கோரிக்கை

விடுமுறை நாளில் தட்டச்சு தேர்வு: அரசுக்கு கோரிக்கை


UPDATED : டிச 04, 2023 12:00 AM

ADDED : டிச 04, 2023 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2023 12:00 AM ADDED : டிச 04, 2023 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தட்டச்சு தேர்வுகளை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு:
தமிழகத்தில் 4,500 தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி பயிலகங்கள் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு தேர்வுகளை, பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில், தமிழக அரசு நடத்துகிறது. பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம் கடைசி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுவது வழக்கம்.ஆனால், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், சனி, ஞாயிறு, திங்கள் என, மூன்று நாட்கள் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், தட்டச்சு பள்ளிகளும் வெகுவாக பாதிப்படைவர்.ஏனெனில், 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்., 23 முதல் 29 வரை செய்முறை பயிற்சி தேர்வு நடக்க உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு, செமஸ்டருக்கு முந்தைய தேர்வு நடக்கிறது. எனவே, பிப்., 24, 25 சனி, ஞாயிறு மட்டும் தேர்வு நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அந்த தேதிகளில் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us