தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு தேர்வு நேரம் குறைக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்

மாணவர்களுக்கு தேர்வு நேரம் குறைக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்

மாணவர்களுக்கு தேர்வு நேரம் குறைக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்


UPDATED : டிச 07, 2023 12:00 AM

ADDED : டிச 07, 2023 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2023 12:00 AM ADDED : டிச 07, 2023 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.தற்போது பிளஸ் 1, 2 மாணவர்கள் முழு ஆண்டுத் தேர்வினை 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுதுகின்றனர். அதிலும் செயல்முறைத் தேர்வு பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பாடங்கள் 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு எழுதுகின்றனர்.மற்ற அனைத்து பாடங்களுக்கு உள் மதிப்பெண் 10 நீங்கலாக 90 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். ஆனால் பழைய முறைப்படி 200 மதிப்பெண்கள் தேர்வு எழுதும் காலத்தில் ஒதுக்கப் பெற்ற 3 மணி நேர காலம் இன்றும் நடைமுறையில் உள்ளது.இதனால் மாணவர்கள் இரண்டு மணி நேரத்தில் உரிய தேர்வை எழுதி விடுகின்றனர். மீதம் உள்ள ஒரு மணி நேரத்தில் மாணவர்களின் மனநிலையும் மாறுகிறது. அறைக் கண்காணிப்பு ஆசிரியர்கள் அவர்களை கண்காணிப்பதில் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி தேர்வு நேரத்தை இரண்டு மணி நேரமாக குறைக்கவேண்டும் என ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us