நிலவுக்கு சுற்றுலா செல்வோம் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
நிலவுக்கு சுற்றுலா செல்வோம் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 10:30 AM
பெ.நா.பாளையம்:
நிலவுக்கு சுற்றுலா செல்வோம் என்ற தலைப்பில் நடந்த போட்டியில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சான்றிதழ் பெற்றனர்.வான் மண்டலத்தில் உள்ள சிறு கோள்கள், தேடல் பிரசாரங்கள், சர்வதேச வானியல் தேடல் ஒத்துழைப்புடன் இயக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார், 1500 அணிகள் இதில் பங்கேற்கின்றன. பங்கேற்பாளர்கள் சிறுகோள்கள் மற்றும் நெப்டியூனின் பொருள்கள் போன்றவற்றை கண்டறிதலில் ஈடுபடுகிறார்கள்.இந்த ஆண்டு, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அஜய் அம்புவிஷ் மற்றும் கோகுல் ஆகியோர் விண்கற்கள் கண்டறியும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனுப்பிய செயல் திட்டத்தில் விண்கற்கள், அதாவது, சிறுகோள்கள் இருப்பதை சர்வதேச விண்கற்கள் தேடும் அமைப்பால் உறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை பாராட்டி சான்றிதழ்களையும் அனுப்பியுள்ளனர்.மேலும் லேனா டேலண்ட் டெஸ்ட் மாநில அளவிலான நிலவை பற்றிய அடிப்படையிலான வினாடி வினா போட்டிகளில், தமிழகம் முழுவதும் சுமார், 29 மாவட்டங்களில் உள்ள, 108 பள்ளிகளைச் சேர்ந்த, 1515 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, மாநில அளவிலான நிலவுக்கு சுற்றுலா செல்வோம் என்ற தலைப்பில் மாணவர்கள் அஜய் அம்புவிஷ் மற்றும் கோகுல் ஆகியோர் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து, வெற்றி பெற்றனர். இவர்களை இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி இளங்கோ பாராட்டி சான்றிதழ்களையும், தொலைநோக்கியையும் வழங்கினார்.மாணவர்களை சிறந்த முறையில் வழிநடத்திச் சென்ற பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆனந்தகுமார் மற்றும் மாணவர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் மற்றும் கணித ஆசிரியர் திருநாவுக்கரசு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகளுக்கும், எஸ்.என்.எஸ்., அகாடமி குழுமத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா கிருஷ்ணன் செய்து இருந்தார்.
