தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மிளிரும் பள்ளி திட்டத்தில் இயற்கை நட்சத்திரம் யார்?

மிளிரும் பள்ளி திட்டத்தில் இயற்கை நட்சத்திரம் யார்?

மிளிரும் பள்ளி திட்டத்தில் இயற்கை நட்சத்திரம் யார்?


UPDATED : டிச 08, 2023 12:00 AM

ADDED : டிச 08, 2023 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2023 12:00 AM ADDED : டிச 08, 2023 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
எங்கள் பள்ளி; மிளிரும் பள்ளி திட்டத்தின்கீழ், சிறப்பாக செயல்படும் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை நட்சத்திரம் ஆசிரியர்களுக்கு இயற்கைத் துணைவன் விருது வழங்கப்படுகிறது.அரசு பள்ளி வளாகங்களை துாய்மையான, சுகாதாரமான கட்டமைப்பு கொண்டவையாக மாற்ற, எங்கள் பள்ளி; மிளிரும் பள்ளி திட்டம், கடந்த செப்டம்பரில் துவங்கப்பட்டது. கல்வித்துறையுடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம், மாசுகட்டுப்பாடு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற, பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை துவக்க அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழு செயல்பட்டாலும், பள்ளி அளவில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பள்ளி அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். குழுவில் தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்க வேண்டும். வகுப்பறை துாய்மை மற்றும் பராமரிப்பை கண்காணிக்க ஐந்து மாணவர்கள் கொண்ட துணைக்குழு ஏற்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.இக்குழுவினர், சுத்தம் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் மேலாண்மை, காய்கறி தோட்டம், கழிவுமறுசுழற்சி, நெகிழி இல்லா பள்ளி வளாகத்துக்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என தொடர் அறிவுறுத்தல்கள் நவ., மாதம் வழங்கப்பட்டது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் பசுமையாக வைத்துக் கொள்ளும் நோக்கில், எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; குழுக்களும் அமைக்கப்பட்டது.இத்திட்டத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு எங்கள் பள்ளி; மிளிரும் பள்ளி&' விருது, மாணவர்களுக்கு இயற்கை நட்சத்திரம், ஆசிரியர் களுக்கு சிறந்த இயற்கை துணைவன் விருது வழங்கப்பட உள்ளது. இதனால், விரைவில் ஆய்வு நடத்தப்பட உள்ளது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us