சிறப்புப் பள்ளிகளில் சேர 22க்குள் விண்ணப்பிக்கலாம்
சிறப்புப் பள்ளிகளில் சேர 22க்குள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:43 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
அம்பேத்கர் சிறப்புப் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என டில்லி அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, டில்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புதுடில்லியில் 4,400 இடங்களைக் கொண்ட 37 அம்பேத்கர் சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் அறிவியல், கணிதம், பொறியியல் உள்ளிட்ட பாடங்களில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தே சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளில் சேர, வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
