தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வானவியல் ஆய்வுகளை விளக்கிய லுானா கேம்ப்

வானவியல் ஆய்வுகளை விளக்கிய லுானா கேம்ப்

வானவியல் ஆய்வுகளை விளக்கிய லுானா கேம்ப்


UPDATED : டிச 08, 2023 12:00 AM

ADDED : டிச 08, 2023 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2023 12:00 AM ADDED : டிச 08, 2023 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நிலவில் நடக்கும் ஆய்வுகள், அதுசார்ந்த தொழில்நுட்ப தகவல்களை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் சார்பில், லுானா கேம்ப் நிகழ்ச்சி, எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது.ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி பிரசார மையம் சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில், விண்வெளி ஆய்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.தொலைநோக்கி வழங்கி, அதன் வாயிலாக, நிலவை ஆய்வு செய்வது எப்படி என்பது குறித்த பயிற்சி, லுானா கேம்ப் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.நிலவு ஆய்வு திட்டங்கள், அடுத்தக்கட்ட இலக்குகள், நிலாவில் அமையவுள்ள சர்வதேச திட்டங்கள், அதுசார்ந்த தொழில்நுட்ப தகவல்கள் குறித்து, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் ராஜகோபாலன் எடுத்துரைத்தார்.விழாவில், காந்திநகர், ஐ.ஐ.டி., தலைமை பண்பு துறை மேலாளர் அனுபமா பிரதீபன், ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் துணைத்தலைவர் பரத்குமார் வேலுசாமி, திட்ட இயக்குனர் பாலாஜி, உதவி அறிவியலாளர் கிருத்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us