தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லி பல்கலை சான்றிதழில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

டில்லி பல்கலை சான்றிதழில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

டில்லி பல்கலை சான்றிதழில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 20, 2023 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 20, 2023 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டில்லி பல்கலையின் சான்றிதழில், ரூபாய் நோட்டைப் போலவே கண்ணுக்குத் தெரியாத &'லோகோ&' மற்றும் &'மைக்ரோ டெக்ஸ்ட்&' போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து, டில்லி பல்கலை தேர்வுத் துறை சிறப்பு அதிகாரி அஜய் அரோரா கூறியதாவது:
ரூபாய் நோட்டைப் போலவே, டில்லி பல்கலையின் சான்றிதழிலும் கண்ணுக்குத் தெரியாத லோகோ மற்றும் மைக்ரோ டெக்ஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப்புதிய சான்றிதழ்கள், வரும் பிப்ரவரியில் நடக்கவுள்ள பல்கலையின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் 2.25 பேருக்கு வழங்கப்படும்.மேலும், பல்கலை வரலாற்றின் முதன் முறையாக சிறப்புப் பட்டம் பெறும் மாணவரின் போட்டோ மற்றும் தாயின் பெயரும் சான்றிதழில் பொறிக்கப்படும். இந்த சிறப்புப் பட்டச் சான்றிதழ், ரூபாய் நோட்டில் உள்ளதைப் போல பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.இதுபோன்ற போலி சான்றிதழை உருவாக்குவது மிகவும் கஷ்டம். அதேபோல, காகிதத்தின் தரம் 100 சதவீதம் தண்ணீர், வெப்பம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.இதுதவிர, சான்றிதழில் மாணவர்களின் விவரங்களை ஸ்கேன் செய்ய கியூ ஆர் குறியீடு, வாட்டர் மார்க் லோகோ, பார் குறியீடு ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இந்த சான்றிதழ் 200 டிகிரி செல்ஷியசில் கூட சேதம் அடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us