தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நன்கொடை வழங்காத மாணவர்களை தேர்வு எழுத விடாத தலைமை ஆசிரியை

நன்கொடை வழங்காத மாணவர்களை தேர்வு எழுத விடாத தலைமை ஆசிரியை

நன்கொடை வழங்காத மாணவர்களை தேர்வு எழுத விடாத தலைமை ஆசிரியை


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 20, 2023 09:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 20, 2023 09:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தர கன்னடா:
நன்கொடை வழங்காத மாணவர்களை, மாதாந்திர தேர்வு எழுத விடாமல் வராண்டாவில் அமர வைத்து, கார்வாரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அவமானப்படுத்தி உள்ளது.உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் தாலுகாவில், செயின்ட் மைக்கேல் கான்வென்ட் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களிடம் 20,000 ரூபாய் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. பொருளாதார பிரச்னையால், சில பெற்றோரால் உரிய நேரத்தில் நன்கொடை வழங்க முடியவில்லை.மாணவர்களுக்கு தற்போது மாதாந்திர தேர்வு நடந்து வருகிறது. நன்கொடை வழங்காத உயர்நிலைப்பள்ளி மாணவர்களை, நேற்று நடந்த மாதாந்திர தேர்வை எழுத விடாமல், வகுப்பறையில் இருந்து வெளியேற்றி வராண்டாவில் அமர வைத்துள்ளனர்.இதன் மூலம், பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டீனா ஜோசப் என்பவர், நன்கொடை வழங்காத மாணவர்களை அவமானப்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். மாணவர்களும் வேறு வழியின்றி பரிதாபமாக அமர்ந்திருந்தனர். இது தொடர்பான படம், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.தகவலறிந்த கல்வி துறை அதிகாரிகள், பள்ளிக்கு சென்று விசாரித்தனர். தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us