UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 10:15 AM
எழும்பூர்:
ஐதராபாத்திலிருந்து ரயில் வாயிலாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த பிரபல தனியார் கல்லுாரி மாணவனை, திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.எழும்பூர் ரயில் நிலையத்தின், 4வது நடைமேடையில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர், எழும்பூர் ஆய்வாளர் திருமால் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐ தராபாத்திலிருந்து - தாம்பரம் செல்லக்கூடிய சார்மினார் விரைவு ரயில் வந்தது. அதில் வந்த பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதில், 4.50 கிலோ எடையிலான கஞ்சா பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன், 22 என்பதும் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.எழும்பூர் போலீசார் மாணவனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
