UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 10:16 AM
பெ.நா.பாளையம்:
தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., பதவிகளுக்கான எழுத்து தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்காணல் தேர்வு நடக்க உள்ளது.இதற்கான மாதிரி நேர்காணல் தேர்வு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், 5 பேர் கொண்ட நடுவர் குழுவினர், மாதிரி நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தினர்.இதில், நேர்காணல் அறையில் உள்ளே நுழைவது முதல் நாற்காலியில் அமர்வது, நேர்காணல் நடத்தும் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்வது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது ஆகியவை குறித்து, கோவை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, துணை இயக்குனர் கருணாகரன், சிறு தொழில் மற்றும் வணிக துறை முதுநிலை ஆலோசகர் வணங்காமுடி, டி.எஸ்.பி., வினோத் உள்ளிட்டோர் பேசினர்.மாதிரி நேர்காணல் நிகழ்ச்சியில், 12 பேர் கலந்து கொண்டனர்.
