என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 10:17 AM
தேனி:
கவுகாத்தியில் நடந்த ேஹக்கத்தான் இறுதி சுற்று போட்டியில் பங்கேற்ற தேனி நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில் நுட்பகல்வி இயக்ககம் சார்பில் ஹேக்கத்தான் போட்டி நடந்தது. இப்போட்டிகள் தேசிய அளவில் 48 இடங்கில் நடந்து வருகிறது. தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியின் 30 மாணவர்கள் 5 குழுக்களாக பங்கேற்றனர். கவுகாத்தியில் நடந்த தொடக்க விழாவில் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆலோசகர் மம்தாராணி மாணவர்களின் புராஜெக்ட்களை ஆய்வு செய்தார். தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ரேஜ்மா மசூதா, நவீன்பாரதி, ரூபினி, விக்னேஷ்வர், சோபியா, அஸ்வின் ஆகியோர் நீர் மின்சாரம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மென்பொருள் தயாரித்து சமர்ப்பித்தனர். மின் உற்பத்தி நிலையத்தின் தன்மை, மழைபொழிவு, நீரோட்டம், மண் தன்மை உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு மென்பொருள் உருவாக்கப்பட்டிருந்தது.இறுதி சுற்று தொடக்க விழாவில் பிரதமர் மோடி மாணவர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் சமர்ப்பித்த மின்நிலையம் தொடர்பான மென்பொருள் பற்றி கேட்டறிந்து இக் கல்லுாரி மாணவர்களை பாராட்டினார். தமிழக அளவில் தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் மட்டும் கலந்துரையாடலில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமரின் பாராட்டுகளைப் பெற்ற மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாயப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.
