தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜனவரி 4ல் துவங்குது சென்னை புத்தகக்காட்சி

ஜனவரி 4ல் துவங்குது சென்னை புத்தகக்காட்சி

ஜனவரி 4ல் துவங்குது சென்னை புத்தகக்காட்சி


UPDATED : டிச 21, 2023 12:00 AM

ADDED : டிச 21, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 21, 2023 12:00 AM ADDED : டிச 21, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஜன., 4ம் தேதி, 47வது சென்னை புத்தகக்காட்சி துவங்க உள்ளது.இது குறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலர் முருகன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில், ஜன., 4ம் தேதி முதல் 21ம் தேதி வரை, 47வது சென்னை புத்தகக்காட்சி நடக்க உள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருதுகளை வழங்க உள்ளார்.புத்தகக்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் மற்ற நாட்களில் மதியம் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடக்கும்.மொத்தம் 18 நாட்கள் நடக்கும் இதில், 800க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறும்.மாணவர்களுக்கு இலவச அனுமதியும், மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படும். தினமும் மாலையில், சிந்தனை அரங்கம் எனும் நிகழ்ச்சி நடக்கும். அதில் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us