UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:37 AM
வால்பாறை:
வால்பாறை எஸ்டேட் பகுதியில் பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில் முழுநேர நுாலகமும், அட்டகட்டியில் பகுதி நேர நுாலகமும், காடம்பாறை கிளை நுாலகமும், சோலையாறுடேம் பகுதியில் ஊர்புற நுாலகமும் செயல்படுகிறது.குறிப்பாக, வால்பாறை நகரில் உள்ள நுாலகத்தை, போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அட்டகட்டி, கருமலை, கவர்க்கல், சின்கோனா, முடீஸ் உள்ளிட்ட இடங்களில் கிராமப்புற நுாலகம் அமைக்க வேண்டும் என்று வாசகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதி வாசகர்கள் கூறுகையில், ஆரம்ப காலத்தில் எஸ்டேட் பகுதியில் இயங்கி வந்த மனமகிழ்மன்றமும் தற்போது இல்லை. இதனால், எஸ்டேட் பகுதியில் படித்த இளைஞர்கள் அன்றாட நாளிதழ்களை வாசிக்க முடியாமலும், புத்தகங்களை படிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.எனவே, தமிழக அரசு நுாலக துறை சார்பில், கருமலை, ரொட்டிக்கடை, முடீஸ், சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில், வாசகர்கள் நலன் கருதி, பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும் என்றனர்.
