UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 11:35 AM
சிங்கம்புணரி:
சிங்கம்புணரியில் பள்ளி மைதானத்தை குடிமகன்கள் பார் ஆக மாற்றி அட்டூழியம் செய்வதால் ஆசிரியர், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமீப காலமாக சமூக விரோதிகள் இரவு நேரங்களில் பள்ளி மைதானத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போடுகின்றனர்.காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் கால்களில் உடைந்த பாட்டில்கள் குத்தி காயம் அடைவது தொடர்கிறது. இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு வரை இப்பள்ளி வளாகத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு முறையாக வாட்ச்மேன் நியமித்தும், போலீசார் பள்ளி வளாகத்தை கண்காணித்து சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.