ஜூபிலன்ட் சர்வதேச கண்காட்சி: நாளை கோவையில் துவக்கம்
ஜூபிலன்ட் சர்வதேச கண்காட்சி: நாளை கோவையில் துவக்கம்
UPDATED : ஜன 31, 2024 12:00 AM
ADDED : ஜன 31, 2024 04:45 PM
கோவை:
ஜூபிலன்ட் கோயம்புத்தூர் அறக்கட்டளை நடத்தும், ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச எக்ஸ்போ மற்றும் உச்சி மாநாடு 2024 கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நாளை துவங்குகிறது.தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, பேம் தமிழ்நாடு நிறுவனங்களின் ஆதரவின்கீழ், பிப்., 3ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம், எலக்ட்ரானிக், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் என உலகெங்கிலும் உள்ள, பல்வேறு துறையினர் கலந்து கொள்கின்றனர்.ஸ்டார்ட் அப் நிலையில் உள்ள நிறுவனங்கள் முதல், சிறு மற்றும் நடுத்தர அளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் வரை, மாநாட்டில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்பதன் மூலம், முதலீடு, கூட்டாண்மை, புது வியாபார தொடர்புகள் உருவாக்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட பல வாய்ப்புகளை பெற்று, வியாபாரத்தை மேம்படுத்தி வளர்ச்சியடையலாம்.கொடிசியா வர்த்தக வளாகத்தின், ஏ அரங்கத்தில் மாநாடும், பி மற்றும் சி அரங்கங்களில் 450க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் கண்காட்சியும், அரசு திட்டங்கள், அரசு வழங்கும் வணிகரீதியான உதவிகள் உள்ளடக்கிய, 50க்கும் மேற்பட்ட பயிற்சி பட்டறைகள் நடைபெறவுள்ளன.