sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறை தேர்வு: வழிகாட்டுதல் வெளியீடு

பிளஸ் 2 செய்முறை தேர்வு: வழிகாட்டுதல் வெளியீடு

பிளஸ் 2 செய்முறை தேர்வு: வழிகாட்டுதல் வெளியீடு


UPDATED : ஜன 31, 2024 12:00 AM

ADDED : ஜன 31, 2024 04:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2024 12:00 AM ADDED : ஜன 31, 2024 04:45 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பிப்., இரண்டாவது வாரம் பிளஸ் 2 மாணவருக்கான செய்முறை தேர்வு துவங்க உள்ள நிலையில், முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில், பிப்., 12 முதல், 17ம் தேதி வரை பிளஸ் 2 மாணவருக்கு, பிப்., 19 முதல், 24 வரை பிளஸ் 1 மாணவருக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான இன்னும் இருவாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்வுக்கு தயாராவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண் பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பிப்., 5 முதல், 17ம் தேதிக்குள் தேர்வுத்துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அதில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us