சென்னையில் இந்திய சர்வதேச தோல் கண்காட்சி: நாளை தொடக்கம்
சென்னையில் இந்திய சர்வதேச தோல் கண்காட்சி: நாளை தொடக்கம்
UPDATED : ஜன 31, 2024 12:00 AM
ADDED : ஜன 31, 2024 04:52 PM
சென்னை:
இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் 37வது பதிப்பு தோல் மற்றும் காலணி துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று தோல் ஏற்றுமதி கவுன்சிலின் தலைவர் ராஜேந்திர குமார் ஜலான் கூறினார். சிஎல்இ நிர்வாக இயக்குனர் செல்வம் கூறுகையில் ,தோல் ஏற்றுமதி வளர்ச்சிகவுன்சில் (சிஎல்இ) கடந்த ஆறு மாதங்களில் 16 சர்வதேச வெளிநாட்டு கண்காட்சிகளில் பங்கேடுத்துள்ளது.இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச்வரை மேலும் 9 வர்த்தக கண்காட்சிகளில் பங்கெடுக்க உள்ளது. இதில் டெல்லியில் நடைபெறவிருக்கும் டெல்லி சர்வதேச லெதர் எக்ஸ்போ மற்றும் சென்னையில் நடைபெறும் வடிவமைப்பாளர் கண்காட்சி ஆகியவை அடங்கும். இந்திய அரசாங்கத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இந்தியக் காலணி மற்றும் தோல் பொருட்கள்மேம்பாட்டுத் திட்டத்தை (ஐஎப்எல்டிபி) 2021முதல்2026 வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.1700 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துகிறது. ஐஎப்எல்டிபி இன் முக்கிய நோக்கங்கள், தோல் மற்றும் காலணித் தொழிலுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல், தற்போதுள்ள உற்பத்தி அலகுகளில் திறன் விரிவாக்கம் மற்றும் புதிய அலகுகளை உருவாக்குதல். புதிய உற்பத்தி மையங்களைஉருவாக்குதல், வெளிநாடுகளில் இந்திய பிராண்டுகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய டிசைன் ஸ்டுடியோக்களை அமைத்தல் போன்றவையாகும் என்றார். சிஎல்இ இன் தலைவர் ராஜேந்திர குமார் ஜலான் மேலும் கூறுகையில், தோல்களுக்கான10% இறக்குமதிவரியை நீக்குதல், அனைத்து மதிப்புகூட்டிய தோல்களை ஏற்றுமதி வரியில்லாமல் அனுமதித்தல் , ஏற்றுமதியாளர்களுக்கானஇறக்குமதிவரி இல்லா ஐஜிசிஆர் திட்டத்தில் மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்தல் போன்றகோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளோம் என்றார்.இக்கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் 1 முதல் 3 பிப்ரவரி 2024 வரை நடைபெற உள்ளது. கண்காட்சியின் துவக்கவிழா நாளை காலை 10 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.