பைக்கில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்
பைக்கில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்
UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:18 AM
பெங்களூரு:
வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பெங்களூரு நகர போக்குவரத்து இணை கமிஷனர் அனுசேத் தெரிவித்தார்.பெங்களூரில் கடந்த வாரம் போக்குவரத்து போலீசார், பள்ளிகள், கல்லுாரிகள் அருகில் வாகன சோதனைகள் நடத்தினர். அப்போது, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஓட்டும் உரிமம் இல்லாமலேயே வாகனம் ஓட்ட தந்த 177 பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில், நகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத் கூறியதாவது:
இரு சக்கர வாகனத்தில் மூன்று, நான்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது சட்டப்படி குற்றம். குழந்தைகளின் நலன் கருதி, இரு சக்கர வாகனத்தில் செல்லும் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஹெல்மெட் அணிவிக்க வேண்டும்.போக்குவரத்து விதிமீறியதாக, 2,681 பேருக்கும் மேற்பட்டோருக்கு, 50,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று போலீசார் அபரா தம் வசூலித்து வந்துள்ளனர். சில உரிமையாளர்கள், அபராதம் செல்ல முடியாமல், வாகனத்தை விற்றது தெரியவந்தது.அத்தகையோருக்கு கால அவகாசம் வழங்க முன்வந்து உள்ளோம். அபராதம் செலுத்தாவிட்டால், நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.