சென்னை புத்தக ஆர்வலர்கள் காஞ்சியில் வாசிப்பு நடைபயணம்
சென்னை புத்தக ஆர்வலர்கள் காஞ்சியில் வாசிப்பு நடைபயணம்
UPDATED : பிப் 26, 2024 12:00 AM
ADDED : பிப் 26, 2024 06:53 AM
காஞ்சிபுரம்:
கனவு நகரம் காஞ்சிபுரம் என்ற நுாலை, எழுத்தாளர் அக்களூர் இரவி, எழுதியுள்ளார். இந்நுாலில், காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்த பல்வேறு ஆளுமைகள் குறித்தும், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்தும், வழிபாட்டு தலங்கள் குறித்தும் விளக்கமாக எழுதியுள்ளார்.இந்நுாலை வாசித்த வாசகர்களுக்கு, நுாலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று காண வேண்டும் என முடிவு செய்தனர்.இதையடுத்து வாசிப்பை நேசிப்போம் குழுவினரும், சென்னையைச் சேர்ந்த புத்தக ஆர்வலர்களும், நுாலாசிரியர்அக்களூர் ரவியுடன் இணைந்து, கதிரவன், கோமதி சங்கர், நல்லுலிங்கம் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர், வாசிப்புச் சுற்றுலா என்ற பெயரில் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காஞ்சிபுரம் வந்தனர்.நுாலில் குறிப்பிடப்பட்டிருந்த, அரசு அருங்காட்சியம், வைகுண்ட பெருமாள், ஐராவதீஸ்வரர், மதங்கீஸ்வரர் கோவில், இசை வாணர் நைனா பிள்ளை வாழ்விடம், சுப்பராய முதலியார் பள்ளி, விடுதலை வீரர் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி பள்ளி, பட்டுத்தறி நெசவுக்கூடம், நிலவொளிப்பள்ளி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.இன்று காலை, அய்யங்கார்குளம் நடவாவி கிணறு, சஞ்சீவிராயர் கோவில், திருப்பருத்திகுன்றம் திரைலோக்கியநாதர் கோவில், கருக்கினில் அமர்ந்தாள் கோவில் பவுத்த எச்சங்கள், ஏகாம்பரேஸ்வரர் கோவில், பெரிய காஞ்சிபுரம் தர்கா, அண்ணா நினைவு இல்லம் உள்ளிட்டவற்றை பார்வையிட உள்ளதாக, வாசிப்பை நேசிப்போம் குழுவினர் தெரிவித்தனர்.