UPDATED : பிப் 26, 2024 12:00 AM
ADDED : பிப் 26, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்ப்பாக்கம்:
பச்சையப்பன் கல்லுாரி மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டு, புகை மண்டலமாக காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லுாரி அமைந்துள்ளது. இந்த கல்லுாரியின் பின்புறம் உள்ள மைதானத்தில் புதர்மண்டி இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென இப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதி முழுதும் புகை மூட்டமாக மாறியது.தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைஅணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.