ஐ.ஏ.எஸ்., தேறியவர்களுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல்
ஐ.ஏ.எஸ்., தேறியவர்களுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல்
UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 06:54 PM
சென்னை:
குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடிய கவர்னர் ரவி, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.
கடந்த ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்யும் குடிமை பணி தேர்வில், தமிழகத்தை சேர்ந்த 32 பேர் வெற்றி பெற்றனர்.
இந்திய வனப்பணி தேர்வில் ஏழு பேர் வெற்றி பெற்றனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடிய கவர்னர் ரவி, அவர்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, பணியில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பணியில் கடினமான சூழல் வரும். மனம் தளராமல் அதை எதிர்கொள்ள வேண்டும். உடல் ரீதியாக, அறிவு ரீதியாக பலமாக இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
நிகழ்வில், கவர்னரின் செயலர் கிர்லோஷ்குமார், தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெற்றோர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.