வேளாண் கல்லுாரி மாணவர்கள் கண்காட்சி நடத்தி விழிப்புணர்வு
வேளாண் கல்லுாரி மாணவர்கள் கண்காட்சி நடத்தி விழிப்புணர்வு
UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, வக்கம்பாளையத்தில், தேனி வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள், வேளாண் கண்காட்சி நடத்தினர்.
அதில், ஊராட்சித்தலைவர் ரவி, பொள்ளாச்சி தெற்கு தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள், வேளாண் கல்லுாரி பேராசிரியர் சரவண பொன்னப்பன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
இதில், மாணவர்கள், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, உயிர் வாயு, ஒருங்கிணைந்த விவசாய முறைகள் குறித்தும், தமிழ்நாடு வேளாண் பல்கலை கோகோகான், தென்னை டானிக், உயிர் உரங்கள் ஆகியவற்றின் மாதிரி செய்முறைகள் வைத்து பயன்களை விளக்கினர்.
நடைமுறை தீர்வுகள், நிலையான நடைமுறைகளை மையமாகக்கொண்டு கண்காட்சி நடத்தப்பட்டது. நவீன நீர்ப்பாசன முறைகள் முதல், இயற்கை விவசாய முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.